News Update :
Home » , , , , , , , , , , , , , , , , , , » மனித உரிமைகள் கோரிக்கைகளை செவிமடுக்காமல், மரண தண்டனையை அமுல்படுத்துங்கள் - ரஞ்சன்

மனித உரிமைகள் கோரிக்கைகளை செவிமடுக்காமல், மரண தண்டனையை அமுல்படுத்துங்கள் - ரஞ்சன்

Written By ADMIN on Saturday, January 9, 2016 | 9:09 AM





நாட்டில் அப்பாவி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் போது மனித உரிமைகள் ஆணைக்குழு நித்திரையில் இருந்து விட்டு தற்போது குற்றமிளைத்தவர்களுக்கு மரண தண்டைனையை வழங்க வலியுறுத்தும் போது கூச்சலிடுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


மரணதண்டனையை தடை செய்யக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கபட்டமை தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


அத்துடன், கொழும்பு 7 இல் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்தில் உள்ள அலுவலகத்திலுள்ளவர்கள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது சிறிதளவேனும் வேதனைப்படவில்லை.


ஏனெனில், அவர்களது குழந்தைகள் மிகவும் சொகுசாக வாழ்வதால் அவர்களுக்கு அப்பாவி குழந்தைகள் பற்றி அக்கறையில்லை.


அவர்களது இல்லங்களில் சீ.சீ.டி.வீ யின் மூலம் அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.


எனவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை ஜனாதிபதி செவிமடுக்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துமாறு தான் கோருவதாகவும் ரஞ்சன் ராமநாயகக்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள .. :
comments powered by Disqus